சென்னை வடபழனி தைப்பூச பால் காவடி சபையின் சார்பில் 42வது ஆண்டு தைப்பூச பால்காவடி, செடல், பூந்தேர் வேல் பூஜை பிப் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
முதல் நாள் -நேற்று :
காலை மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.
மாலை வடபழனி பெரியபாளைத்தம்மனுக்கு அபிஷேகம் முடிந்த பிறகு பால் காவடி சபையிலிருந்து சக்தி வேலுடன் வடபழனி ஆண்டவர் கோவில் குளக்கரையில் அபிசேக அலங்காரம் நடைபெற்றது.
இரண்டாம் நாள் பிப் 3 இன்று :
தைப்பூசத்தன்று காவடிகளுக்கு அபிஷேக அலங்காரம்.
வடபழனி பெரியபாளைத்தம்மன் ஆலயத்தில் உள்ள அருணகிரி நாதர் பந்தலில் மிளகாய் சாந்து அபிஷேகம், மழுவடித்தல், மஞ்சள் இடித்தல், காவடிகள் பால் குடங்களுடன் தீ மிதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் காலையில் நடைபெறும்.
காவடிகளின் பாலையும், பால்குடங்களின் பாலையும் வடபழனி ஆண்டவருக்கு பிற்பகல் அபிஷேகம் நடைபெறுகிறது.
மூன்றாம் நாள் பிப் 4 நாளை :
வடபழனி ஆணடவருக்கு சந்தனகாப்பு, இடும்பர் அபிஷேகம், பெரியபாளையத்தம்மனுக்கு அபிஷேகம், தங்க ரத சேவை ஆகியவை நடைபெறும்.
மேலும் தகவலுக்கு 044-24818274 என்ற எண்ணை தொடர்புக்கு அழைக்கவும்.
English Summary: Thai Poosam funtion starts with full grace in Vadapalani Murugan Temple.