கனடா நாட்டைச் சேர்ந்த பிரின்சஸ் மார்கரெட் என்ற புற்றுநோய் மருத்துவமனையுடன் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
நேற்று அடையாறு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், புற்றுநோய் மருத்துவ துறைத் தலைவர் டி.ஜி.கணேசன் பேசியதாவது:
மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த பிரின்சஸ் மார்கரெட் மருத்துவமனையின் குழுவினர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைப் பார்வையிட்டனர். பின்னர் கல்வி, சிகிச்சை, பயிற்சி, ஆராய்ச்சி ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் இணைந்து செயல்படும் வகையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா கலந்து கொண்டு பேசியதாவது: நோயாளிகளுக்கு பயன்தரும் வகையிலும், புற்றுநோயாளிகளை மையப்படுத்தியும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது’ என்று கூறினார்.
கனடா பிரின்சஸ் மார்கரெட் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மேரி காஸ்பரடோவிச், புற்றுநோய் மருத்துவத் துறை பேராசிரியர் அமித் ஓஸா ஆகியோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
English summary: Canada’s new agreement with the hospital, the Adyar Cancer Hospital