seminar1316வளர்ந்து வரும் நாகரீக உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மற்றும் ஜங்க்ஃபுட் ஆகியவற்றை உட்கொண்டு உடலுக்கு தேவையான சக்தியை பெற்று வராத நிலையில் பொதுமக்களுக்கு உணவே மருந்தாக இருக்கும் நமது பாரம்பரிய உணவு குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கில் சென்னையில் இன்று ஒரு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

‘தமிழ்ப் பாரம்பரியமும், இயற்கை உணவும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஒரு நாள் கருத்தரங்கம் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

நோய்களில் இருந்து மீள உதவும் உணவுகள், இயற்கை வேளாண்மைக்கான சந்தை, சிறுதானிய சமையலும், சிறப்பான உடல்நலமும், இயற்கையோடு இசைந்த வாழ்வியல் அறம் ஆகிய தலைப்புகளில் மருத்துவர்கள், வல்லுநர்கள் பேசுகின்றனர்.

இந்த கருத்தரங்கில் பங்கு பெறுவோர்க்கு, நவதானிய சுண்டல், ஆவாரம்பூ தேனீர், வரகு பிரியாணி, சாமை கூட்டாஞ்சோறு, அரிசி வடகம், குதிரை வாலி தயிர் சோறு, புதினா துவையல், திணை பாயாசம், துளசி தேநீர் ஆகியவை வழங்கப்படுகிறது.

கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவரம் வேண்டுவோர் இக் கருத்தரங்கின் ஏற்பாட்டாளர் சாவித்திரி கண்ணனை 99404 16408 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் சென்னை மக்கள் கலந்து கொண்டு நமது பாரம்பரிய நோய் தீர்க்கும் உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

English summary: Seminar about Natural Food in Chennai