iasfree1316ஐஏஎஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அவர்களை ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராக இலவசப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வை சென்னை அண்ணா நகர், திருமங்கலத்தில் செயல்பட்டுவரும் ஃபோக்கஸ் அகாதெமி வரும் மார்ச் மாதம் 6ஆம் தேதி ஞாயிறு அன்று நடத்தவுள்ளது.

தேர்வில் பட்டப் படிப்பு முடித்துள்ள 25 வயதுக்கு உள்பட்டோர் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம். 50 மாணவர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு முதல்நிலை, முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி, பாடக் குறிப்புகள் வழங்கப்படும்.

எனவே, தேர்வு எழுத விரும்புவோர் நேரில் வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு 9442722537 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அகாதெமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary: Free training for the IAS test