electioncommission9216தமிழகத்தில் தேர்தால் தேதி வரும் 16ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்ப்பதிவு என்ற இலக்கினையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பல்வேறு வழிகளில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் நிலையில் சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளளும் நடவடிக்கை தற்போது எடுக்க்கப்பட்டு உள்ளது. இதற்கான வாகனம் ஒன்றை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் தேர்தல் விழிப்புணர்வு விடியோ பிரசார வாகனம் கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது. இந்த வாகனம் சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கும் சென்று வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுப்பதிவின் முக்கியத்துவம் குறித்து விளக்கி வருகிறது. நேர்மையான ஓட்டுப்பதிவு, பணத்துக்காக ஓட்டை விற்கக் கூடாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்து எல்.இ.டி. விடியோ படக்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நடிகர் சூர்யா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடித்துள்ள காட்சிகள் பொதுமக்களிடையே திரையிடப்படுகின்றன. இந்த பிரசார வாகனம் காலை முதல் இரவு வரை மாநகரின் பல்வேறு இடங்களை வலம் வரவுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தேர்தல் அதிகாரி பி.சந்திரமோகன் கூறியதாவது:

ஒப்புகைச் சீட்டு: தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனம் பொதுமக்கள் கூடக்கூடிய சந்தைகள், வணிக வளாகம், பூங்கா போன்ற பகுதிகளுக்கு தினமும் சென்று அங்கு விடியோ ஒளிபரப்பு செய்யப்படும். ஒரு தொகுதிக்கு 4 மாதிரி வாக்குச் சாவடிகளும், ஒரு மகளிர் வாக்குச் சாவடியும் அமைக்கப்படும். இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறோம். யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு அண்ணாநகர் தொகுதியில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால், அந்த பணிகள் தொய்வு இல்லாமல் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

English Summary: Election awareness Campaign in Chennai Constituencies.