trainரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக திடீரென பயணத்தை ரத்து செய்தால் தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களை ரத்து செய்வது வழக்கமான ஒன்று. பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்திருந்தால், அதே ஆன்லைனில் அந்த டிக்கெட்டுக்களை ரத்து செய்யும் வசதி உள்ளது. ஆனால் ஒருவேளை அவர்கள் கவுண்டரில் முன்பதிவு செய்திருந்தால் கவுண்டருக்கு சென்றுதான் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை இதுவரை இருந்தது. கவுண்டரில் வரிசையில் நிற்பதால் கால நேரம் வீணாகிறது. இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்காக தென்னக ரயில்வே தற்போது சென்போல் மூலமே கவுண்டரில் எடுத்த டிக்கெட்டுக்களை ரத்து செய்யும் புதிய வசதியை விரைவில் தொடங்கவுள்ளது.

இனிமேல் கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறும் பயணிகள் தங்களுடைய செல்போன் மூலம் 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு டிக்கெட்டை ரத்து செய்யலாம். இந்த புதிய திட்டம் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் முடிந்து விட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கூறியபோது, “கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறுவோர் அதை ரத்து செய்ய வசதியாக இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்மூலம் பயணிகளின் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும். உடனடியாக செல்போன் மூலம் ரத்து செய்வதால், திரும்பப் பெறும் கட்டணமும் பெரிய அளவில் இழப்பில்லாமல் கிடைக்க வாய்ப்புள்ளது. 139 எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி முழுவிவரங்களையும் அளித்த பின்னர், உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒன் டைம் பாஸ்வோர்டு) வரும். இதை உறுதி செய்த பின்னர், டிக்கெட் ரத்தாகும். பயணிகள் காலம் தாமதிக்காமல் அதே தினத்திலேயே அருகில் உள்ள கவுன்ட்டருக்கு சென்று, பணத்தை பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறினர். இந்த திட்டத்திற்கு பயணிகளிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: How Cancel a train ticket by Phone.