Trains-281115-001வரும் ஏப்ரல் 1ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் அதனையடுத்து ஒருசில நாட்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நிறைவு பெறவுள்ளது. இதனையடுத்து கோடை விடுமுறை மாணவர்களுக்கு அளிக்கப்படவுள்ளதால், கோடையில் சுற்றுலா செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னையில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

1. சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00601: ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2. திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00602: ஏப்ரல் 17-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

3. சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00605: ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். ரயில் எண் 00604: ஏப்ரல் 17ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கண்ட மூன்று சிறப்பு ரயில்களையும் கோடை விடுமுறை செல்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

English Summary: Special train for Summer Holidays.southern Railway Announcement.