சென்னைக்கு குடிநீரை வழங்கி வருவதில் முக்கிய இடம் வகிக்கும் மீஞ்சூர் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் விளங்கி வருகிறது. இந்நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்கப்படும் 1000 மி.மீ விட்டமுள்ள குழாயில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (09.06.2016) காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்நிலையத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

இதன் காரணமாக இன்றும் நாளையும் அதாவது 09.06.2016 மற்றும் 10.06.2016 அன்று கீழ்க்கண்ட பகுதிகளில் வழங்கப்பட உள்ள குடிநீர் அளவு குறைவாக இருக்கும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 1) மாதவரம், 2) மணலி, 3) திருவொற்றியூர், 4) எர்ணாவூர், 5) கத்திவாக்கம், 6) பட்டேல் நகர், 7) வியாசர்பாடி ஆகிய பகுதிகளின் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துப்படுகிறார்கள். மேலும், அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள கீழ்க்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

பகுதிப் பொறியாளர் 1-8144930901, பகுதிப் பொறியாளர் 2-8144930902, பகுதிப் பொறியாளர் 3-8144930903, பகுதிப் பொறியாளர் 4-8144930904, தலைமை அலுவலகம் புகார் பிரிவு – 044-28454040 மற்றும் 044-45674567.

English Summary : North Chennai drinking water supply will be affected due to maintenance works.