கடந்த 1ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பாடபுத்தகங்களை இதுவரை பெறாத மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தால் அவர்களுக்கு வீடுதேடி பாடபுத்தகங்கள் வரும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது: 2016-17 கல்வியாண்டுக்கான பாட நூல்களை பள்ளிகளே மொத்தமாக கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. மாணவர்களும் தங்களுக்குத் தேவையான பாட நூல்களை www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து, பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் தேவைப்படும் பாட நூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். அடுத்த 48 மணி நேரத்துக்குள் பணம் செலுத்தியவரின் வீட்டு முகவரிக்கு கூரியர் சேவை மூலம் பாட நூல்கள் அனுப்பி வைக்கப்படும். இ-சேவை மைய முகவரி விவரங்களும் பாட நூல் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Textbook delivery at your door steps.