மழலை பள்ளிகள் அங்கீகாரம் பெற ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் பிறப்பித்த உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது:

1½ முதல் 3½ வயது வரை உள்ள குழந்தைகளை பராமரிக்கவும், அவர்களுக்கு விளையாட்டு முறையில் கல்வி கற்பிக்கவும் மழலை பள்ளிகள் தமிழ்நாட்டில் தனியார்கள் சார்பில் 1,426 உள்ளன. இந்த பள்ளிகள் இயங்கும் கட்டிடத்தின் உறுதிச் சான்றிதழ், சுகாதார சான்றிதழ், தீ அணைப்பு சான்றிதழ் முதலிய சான்றிதழ்களுடன் பள்ளிகளின் அங்கீகாரத்திற்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியிடம் விண்ணப்பிக்கவேண்டும்.

அவ்வாறு இதுவரை சிலர்தான் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் பள்ளிகளின் அங்கீகாரம் பெற ஜூலை 31-ந்தேதி கடைசி நாளாக இருந்தது. அதை தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் அக் டோபர் 31-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

English Summary:UKG