செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகனங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனை தொடர்ந்து, கடந்த 2000-ம் ஆண்டு மேம்பாலம் அமைக்க 76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் வழங்கியது. ஆனால், பணிகள் நடக்கவில்லை. இதுகுறித்து, அரசியல் கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு ரூ.234.37 கோடி திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த பணியில், செங்கல்பட்டு – தாம்பரம் மார்க்கமாக பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வந்த ஒருவழிப்பாதை மேம்பால பணி நிறைவடைந்ததையடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.