கடந்த 80 மற்றும் 90களில் கோலிவுட்டின் பிரபல நாயகனாக இருந்த நடிகர் கார்த்திக் சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த “அனேகன்’ படத்தின் மூலம் வில்லனாக ரீஎண்ட்ரி ஆனார். இந்த படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் கார்த்திக் தற்போது ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் ‘அமரன் 2’. கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான அமரன் படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்த படம் என்பது ஏற்கனவே தெரிந்ததே.
இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் தேர்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் கார்த்திக்க்கின் மகனும், கடல், வை ராஜா வை ஆகிய படங்களின் நாயகனுமான கவுதம் கார்த்திக்கின் பங்கும் பெருமளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகனாக நடிக்கும் தந்தை கார்த்திக், மற்றும் இயக்குனர் ராஜேஷ்வர் ஆகியோர்களுக்கு தேவையான தற்போதைய இளைஞர்களின் பழக்கவழக்கம், ஸ்டைல் மற்றும் உடையலங்காரம் ஆகியவை குறித்து பல்வேறு டிப்ஸ்களை கவுதம் கார்த்திக் கூறி வருகின்றாராம். கவுதம் கொடுத்த டிப்ஸ்களை கார்த்திக் மற்றும் ராஜேஷ்வர் சில மாற்றங்கள் செய்து படத்தின் முக்கிய காட்சிகளின்போது பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary: Actor Gowtham Karthik is going to help for his father Actor Karthik’s new movie “Amaran 2”.