பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் முன்னாள் நடிகை மேனகாவின் மகள் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் அதற்குள் அவருக்கு சுமார் அரை டஜன் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

நடிகை கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘ரஜினிமுருகன்’, விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘இது என்ன மாயம்’ ஆகிய படங்கள் இன்னும் சில நாட்களில் ரிலீஸாகவுள்ள நிலையில் அவருக்கு வரிசையாக படங்கள் குவிந்து கொண்டே வருகிறது.

யான்’ படத்திற்கு பின்னர் ஜீவா நடிக்கும் அடுத்த படமான “கவலை வேண்டாம்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாயும் புலி’ படத்தை அடுத்து பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் அடுத்த ஆக்சன் படத்திலும் கீர்த்தி சுரேஷ்தான் நாயகி என கூறப்படுகிறது.

இயக்குனர் பாண்டியராஜ் முதலில் இந்த படத்தில் நித்யாமேனனைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருந்தாராம். ஆனால் ரஜினிமுருகன் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் பரிந்துரையின்படி கீர்த்தி சுரேஷை நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த வருடத்தில் மட்டும் கீர்த்தி சுரேஷ் நடித்த 4 படங்கள் ரிலீஸாகும் என கூறப்படுவதால் இவ்வருட இறுதியில் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறப்படுகிறது.

English Summary: Keerthi Suresh going to starring against Vishal after Jeeva and Dhanush.