amala-4112015உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ திரைப்படம் வரும் தீபாவளி முதல் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகவுள்ள கமலின் அடுத்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இந்த படத்தில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக இருந்தவரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனனின் மனைவியுமான அமலா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன், அமலா ஆகியோர் இணைந்து ‘பேசும் படம்’, ‘சத்யா’, ‘வெற்றிவிழா’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அமலா மட்டுமின்றி மற்றொரு நாயகியாக பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜரினா வாஹாப் அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் உள்பட மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
English summary-Actress amala to join in kamal’s upcoming film