கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் அஜீத் நடித்த ‘வீரம்’ திரைப்படமும், விஜய் நடித்த ‘ஜில்லா’ திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டு படங்களுமே பெரும் வெற்றியை பெற்றது. அதன்பின்னர் இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை ஏற்படவில்லை. இந்நிலையில் அஜீத் நடிக்க இருக்கும் அடுத்த படமான ‘அஜீத் 56’ படத்தின் தொடக்க விழாவும், ‘விஜய் தற்போது நடித்து வரும் ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் நாளும் ஒரே நாளாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்பட பலர் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜீத் நடிக்கவுள்ள அடுத்த படமும் இதே தமிழ்ப்புத்தாண்டு தினத்தில்தான் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த புதிய திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க அனிருத் இசையமைக்கின்றார். இந்த படத்தில் அஜீத் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.

English Summary : After 2014 jilla and veeram Clash, Ajith- Vijay films to be clash in the same day again.