கடந்த 2013ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் அறிகுறி இருந்ததால் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இரண்டு மார்பகங்களையும் மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறை மூலம் நீக்கியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் புற்றுநோய் அபாயம் காரணமாக அவர் தனது கருப்பையையும் கருமுட்டைக் குழாய்களையும் சிகிச்சை மூலம் அகற்றியதாக தற்போது கூறியுள்ளார்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த தகவலை துணிச்சலாக அவர் வெளியிட்டதாகவும், அவருடைய வெளிப்படைத் தன்மையை மருத்துவ நிபுணர்கள் பாராட்டியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த சிகிச்சையை தான் செய்து கொண்டதாகவும், சிகிச்சைக்கு பின்னர் கணவர் மற்றும் குழந்தைகளுடனும் தான் நலமாக இருப்பதாகவும், இதனை வெளிப்படையாக தெரிவிப்பதால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற காரணத்தால் இந்த தகவலை தான் தெரிவித்திருப்பதாகவும் ஏஞ்சலினா ஜோலி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி – பிராட்பிட் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமின்றி அவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Actress ‘s bold announcement on removing her Uterus, fallopian tubes.