ஏப்ரல் மாதத்தில் ஹவுரா- சென்னை சென்ட்ரல் இடையே பிரீமியம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏப்ரல் 7, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஹவுராவில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.50க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு ஏப்ரல் 8, 15 மற்றும் 22 தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹவுரா சென்றடையும்.

8-ம் தேதி புறப்படும் ரெயிலுக்கான முன்பதிவு வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. மற்ற இரு ரெயில்களுக்கான முன்பதிவு பயண தேதிக்கு 10 நாட்களுக்கு முன் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

English Summary: Chennai Central to Howra Special Premium Trains run on April 8, 15 and 22.