அஜித், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘வீரம்’ சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘வேதாளம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் ஒருசில விடுபட்ட காட்சிகளை நேற்று முன் தினம் படக்குழுவினர் படமாக்கினர். இந்த படப்பிடிப்பில் அஜீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதி நாளின் படப்பிடிப்பில் அஜித் நடனமாடும் சில காட்சிகளை படமாக்கியபோது அஜீத்துக்கு திடீரென காலில் அடிபட்டிருக்கிறது. ஏற்கனவே ‘ஆரம்பம்’ படத்தின்போது காலில் அடிபட்டு, ப்ளேட் வைக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால் அவர் படப்பிடிப்பு தளத்தில் வலியால் துடித்துள்ளார். உடனடியாக படக்குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்து அஜீத்தின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் இறுதிநாள் படப்பிடிப்பு தன்னால் நிற்க வேண்டாம் என்றும் முதலுதவி சிகிச்சையை எடுத்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று அஜீத் கூறி அதன்படி வலியுடன் மீதிக்காட்சிகளில் நடித்து முடித்துள்ளார்.
அஜீத்தின் காலில் அடிபட்டதால், நேற்று ‘வேதாளம்’ படப்பிடிப்பில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இப்படத்தின் முதல் பாதி டப்பிங் பணிகளை அஜித் முடித்துவிட்டநிலையில், விரைவில் இரண்டாம் பாதி டப்பிங் பணிகளை அவர் தொடர்வார் என்றும் இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
English summary – Ajith wound his leg While dancing to some tunes in Vedalam shoot.