Thangamagan-1விஐபி என்னும் வேலையில்லா பட்டதாரி’ வெற்றி படத்தை அடுத்து தனுஷ் மற்றும் வேல்ராஜ் மீண்டும் இணைந்துள்ள ‘விஐபி 2’ எனப்படும் இந்த படத்திற்கு ரஜினியின் பட டைட்டிலான ‘தங்க மகன்’ என்று வைக்கப்பட்டுள்ளது என்பதை சமீபத்தில் பார்த்தோம். ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’, ‘மாப்பிள்ளை’ ஆகிய டைடிட்ல்களை பயன்படுத்திய தனுஷ் தற்போது மூன்றாவது முறையாக ரஜினியின் டைட்டிலை பயன்படுத்தியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

தனது படத்திற்கு ரஜினியின் டைட்டிலை வைத்ததோடு மட்டுமில்லாமல் இந்த படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ரஜினியின் பிறந்த நாளில் ‘லிங்கா’ வெளியான நிலையில் இவ்வருட ரஜினியின் பிறந்த நாளில் ‘தங்க மகன்’ வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனிருத் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், சமந்தா, எமிஜாக்சன், சதீஷ், ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
English summary – Dhanush’s Thangam Magan will be released on superstar Rajinikanth birthday.