குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருப்பதால் அங்கு வரும் வெளி நாட்டு பயணிகள் மதுபானம் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். அதை தீர்க்க குஜராத் அரசு அவர்களுக்கு மட்டும் மதுபானம் அருந்துவதற்கு நிபந்தனையுடன் கூடிய உரிமம் வழங்க முடிவு செய்துள்ளது.
அந்த நிபந்தனைகள் பின்வருமாறு:
- மதுபானம் வாங்குவதற்கு உண்டான உரிமையை முன்னதாகவே இணையத்தின் மூலம் விண்ணபிக்க வேண்டும்.
- குறிப்பிட்ட சில நட்சத்திர விடுதிகளில் மட்டும் குறிப்பிட்ட மதுவகைகள் மட்டும் அவர்களுக்கு விற்கப்படும்.
- மேலும் அவர்கள் ஒவ்வொரு முறையும் அவர்கள் மது வாங்கும் பொழுது அவர்கள் அந்த உரிமத்தை காண்பிக்க வேண்டும்.
- தான் வாங்கிய மதுவை மற்றவருக்கு குடுக்ககூடாது.
- ஒரு வெளிநாட்டவர், அதிகமாக மது வைத்திருப்பதாக தெரிந்தால், மாவட்ட கலக்டர் அவரிடம் இருந்து அந்த மதுவை பறிமுதல் செய்து அவற்றை ஏலம் விட்டு வந்த பணத்தில், அந்த வெளிநாட்டு நபர் அந்த மதுவை எவ்வளவு பணம் குடுத்து வாங்கினரோ அதை திருப்பி கொடுப்பார்.
- மது அருந்துவதற்கு வாங்கும் உரிமத்திற்கு கட்டணம் கிடையாது.