சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய விமானகள் நான்கு மணி நேரம் கலதமதமாகும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, சென்னையில் இருந்து 6:40 மணிக்கு டெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் காலை 10:40 மணிக்கு புறப்படும், மும்பையில் இருந்து காலை 7:20க்கு வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் காலை 11:30 மணிக்கு வந்து சேரும் என்று கூறியுள்ளனர்.