மத்திய அரசு, சுமார், ரூ.7,500 கோடி மதிப்பில் செய்து தரப்படவுள்ள இந்த WiFi வசதியை, நாட்டின் 2,500 நகரங்களில் அடுத்த ஆண்டிற்குள் இலவசமகா செய்து தர திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு வரை பொதுமக்கள் இலவசமாகபயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு மேல் WiFi சேவையை பணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்.(BSNL), சார்பில், சென்னை, கோல்கட்டா, லக்னோ, டேராடூன், ஐதராபாத், வாணாசி, போபால், ஜெய்ப்பூர்,பாட்னா, இந்தூர், சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் WiFi வசதியை ஏற்படுத்தப்பட உள்ளது.