‘தல’ என அன்போடு அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் அஜீத், கடந்த ஒருசில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோற்றமளிக்கின்றார். இந்த தோற்றம் ரசிகர்களிடம் மட்டுமின்றி முன்னணி நடிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்த தோற்றத்தை பல நடிகர்கள் தங்கள் படங்களிலும் பின்பற்றி வரும் நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானும் தன்னுடைய அடுத்த படத்தில் இந்த சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது.
‘பிகே’ படத்தை அடுத்து அமீர்கான் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘டங்கல்’ (Dangal) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரில் தொடங்கியது.
இந்த படத்தில் அமீர்கான் தந்தை மற்றும் மகன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளார். பிரபல இந்திய குத்துச்சண்டை வீரர் மகாவீர்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்லது. இந்த படத்திற்காக அமீர்கான் 20 கிலோ எடையை அதிகரித்து தற்போது 95 கிலோ எடையுடன் உள்ளார். தந்தை வேடத்திற்காக இந்த எடையுடன் வரும் டிசம்பர் மாதம் வரை இருக்கபோவதாகவும், அதன்பின்னர் மீண்டும் மகன் வேடத்திற்காக உடம்பை குறைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் தந்தை வேடத்தில் நடிக்கும் அமீர்கானுக்கு சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹேர்ஸ்டைலுடன் அவர் மும்பையில் இருந்து லூதியானாவுக்கு விமானத்தில் சென்றார். அப்போது மும்பை விமான நிலையத்தில் அமீர்கானை பார்த்து, அவரது புதிய லுக்கிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புதிய கெட்டப் அஜீத்தின் வீரம்’ கெட்டப் போன்று உள்ளதாக டுவிட்டரில் அஜீத் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரபல தொலைக்காட்சி நடிகை சாக்ஷி தன்வார் அமீர்கானின் மனைவியாக ‘டங்கல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஃபாத்திமா சனா சாயிக் மற்றும் சான்யா மல்ஹோத்ரா ஆகிய இரண்டு புதுமுகங்கள் அமீர்கானுக்கு மகள்களாக நடிக்கின்றனர்.
English Summary : Amir Khan tries Ajith’s salt and pepper look.