counselingஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணிகளுக்காக இதுவரை ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் இந்த படிப்புக்காக விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களின் விண்ணப்பங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 28-ம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 5-ம் வரை நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்னர் கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதியிடம் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “பாடப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு வாரியான கட் ஆப் மதிப்பெண் பட்டியல் வரும் வெள்ளியன்று அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படும். கட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்” என்று கூறினார்

English Summary:B.Ed Counseling Date Announced.