ammatheaterசென்னை நகர மக்கள் குறைந்த கட்டணத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு வசதியாக சென்னையில் 6 இடங்களில் அம்மா திரையரங்குகள் சென்னை மாநகராட்சியின் சார்பில் விரைவில் அமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியின் இந்த திட்டம் அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்படவுள்ள ‘அம்மா திரையரங்குகளுக்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிகளுக்கான திட்ட அனுமதிக்காக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசிடம் இருந்து அனுமதி வந்தவுடன் தியேட்டர்களின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது:-

அம்மா திரையரங்குகள் சென்னையில் ராயபுரம் (மண்டலம்-5) பேசின்பிரிட்ஜ் புதிய லாரி டெப்போ அருகில் திரு.வி.க.நகர் (மண்டலம்-6) பழைய மண்டல அலுவலகம்-3, தேனாம்பேட்டை (மண்டலம்-9) கோட்டூர்புரம், டேர்ன்புல்ஸ் சாலை, கோடம்பாக்கம் (மண்டலம்-10) தியாகராயநகர், உஸ்மான் சாலையிலும், சிவஞானம் தெருவிலும், ஆலந்தூர் (மண்டலம்-9) பாரதிசாலையிலும் என மொத்தம் 6 இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

அம்மா திரையரங்குகள் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணி முடிவடைந்துள்ள நிலையில், திரையரங்குகள் அமைப்பதற்கான திட்ட அனுமதிக்காக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்குவதற்கு எப்படியும் ஒரு மாதம் ஆகும். அனுமதி வழங்கிய பின், திரையரங்குகளை எந்த வகையில் அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

பின்னர், திரையரங்குகள் அமைப்பதற்கான ‘டெண்டர்’ கோரப்படும். டெண்டர் கோரபட்டதும், ஒரு வாரத்திற்குள் பணிகள் தொடங்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 2-க்கும் மேற்பட்ட குளிரூப்பட்டப்பட்ட திரையரங்குகள் தான் அமைக்கப்படும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடங்கள் அனைத்தும் 1 ஏக்கருக்கு குறைவில்லாத இடம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary:Amma theaters in 6 places at chennai