தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளின் டிசம்பர் மாத பருவத் தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையை வைத்து அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசைப் பட்டியல் ஒன்றை தயாரித்து நேற்று வெளியிட்டூள்ளது.
இந்த பட்டியலில் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் ஆய்வு நிறுவனம் 98.33 தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி 93.36 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்திலும், ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்ப நிறுவனம் 92.68 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
மேலும் இந்த பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 6 கல்லூரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3 கல்லூரிகள் ஆகியவை முதல் 20 இடத்திற்குள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள மீனாட்சி சுந்தரராஜன் கல்லூரி 85.18 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் 20 இடங்களுக்குள் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த முதல் 10 கல்லூரிகளின் பெயர்கள் பின்வருமாறு:
1. பிஎஸ்ஜி தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், கோவை
2. ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்
3. ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்ப நிறுவனம், காஞ்சிபுரம்
4. ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி
5. ராம்கோ தொழில்நுட்ப நிறுவனம், விருதுநகர்
6. ஸ்ரீசிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்
7. பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்
8. வின்ஸ் கிறிஸ்தவ மகளிர் பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி
9. ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, வேலூர்.
10. மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, சென்னை
மேலும் தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் குறித்த முழு விவரங்களை annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
English Summary : Anna university released Engineering college ranking list for the year 2015.