சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்ம் நிலைத்த மருத்துவ உபகரண ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராஜாராமும், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ். கீதாலட்சுமியும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது:
பிரபல மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து ஏற்கெனவே பல்வேறு துறை சார்ந்த படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்துடன் இப்போது போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சமூகத்துக்குப் பயன்படக் கூடிய வகையில் நிலைத்த மருத்துவ உபகரண ஆராய்ச்சி, மேம்பாடுகளில் பல்கலைக்கழகம் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:Anna university’s new medical research agreement