Tamilnadu-VAO-results-2014-TNPSC-resultsதமிழகத்தில் காலியாக உள்ள 89 குழந்தை நல அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சென்னையில் குரூப்-2 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுகள் 167 மையங்களில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் 64 ஆயிரத்து 309 பேர் கலந்து கொண்டனர் சென்னை சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த தேர்வை நேரில் பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்ரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பேறு கால மற்றும் குழந்தை நல அலுவலர்களுக்கான பொறுப்புகள் முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படவுள்ளன. தற்போது இந்த பொறுப்பில் 89 காலியிடங்கள் உள்ளன. பி.எஸ்.சி.நர்சிங் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

குரூப் -1 தேர்வுகளுக்கு கடந்த 24-ம் தேதி வரை 60 ஆயிரத்து 444 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 9-ம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த நான்கு ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வேலையில் நியமிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 11 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குரூப் 2 தேர்வுகள் முறை யாக நடப்பதை கண்காணிக்க 2,904 தலைமை கண்காணிப் பாளர்களும் சுமார் 31 ஆயிரம் கண்காணிப்பாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். இது தவிர 500 பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் சோதனையிட்டனர். 1000 பேருக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதிய மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. 1000-க்கு குறைவானோர் தேர்வு எழுதிய மையங்களில் வீடியோ பதிவு செய்ய 1800 வீடியோ பதிவாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary:For the first time, the child welfare officer chosen by TNPSC