trainநீண்ட தூரம் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ஸ்லிப்பர் அல்லது இருக்கையிலேயே தூங்கி விடுவது வழக்கம். ஆனால் ஒருசில தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது தெரியாமல் தூங்கிவிட்டு பின்னர் அவஸ்தை படுவதுண்டு. இந்த நிலையை போக்க இந்திய ரயில்வே ஒரு புதிய முறையை கொண்டு வந்துள்ளது. ரயில்களில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு செல்லும் பயணிகளை, அவர்கள் இறங்க வேண்டிய நிலையம் வந்ததும் எழுப்பிவிடும் வகையில் “ட்ரெயின் டெஸ்டினேஷன் அலார்ம் கால்’ என்ற புதிய வசதியை ரயில்வே துறை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள பயணிகள் தங்களது பயணச் சீட்டின் பி.என்.ஆர். எண், இறங்க வேண்டிய ரயில் நிலையத்தின் விவரம், இறங்கும் ரயில் நிலையத்தின் எஸ்டிடி கோட் ஆகியவற்றை 139 ரயில்வே விசாரணை எண்ணில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு, அவர்கள் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு 30 நிமிஷங்களுக்கு முன்னதாக ரயில்வே துறையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துவிடும். எனவே, பயணிகள் எந்த கவலையும் இன்றி நிம்மதியாக உறங்கிக் கொண்டே இனி பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 139 என்கிற ரயில்வே விசாரணை எண் சேவையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தத்கால் இருக்கைகள் இருப்பு எண்ணிக்கை, பயணம் ரத்து செய்வது பணம் ரீஃபண்ட் செய்வது, ரயில் எந்த இடத்தில் இருக்கிறது என்கிற சமகால தகவல்கள், ரயில் புறப்படும், சேரும் நேரம், பயணச் சீட்டுகளின் விலை, ரயிலில் பயணம் செய்யும் போது முன்பதிவு செய்யப்படும் உணவு போன்றவற்றுக்கு இந்த எண் மூலம் வழிகாட்டும் வகையில் பல புதிய வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

English Summary:Alaram to wake sleeping passengers on the train.Railway introduced a new facility