சென்னையில் மெட்ரொ ரயில் பணிகள் விறுவிறுப்பாக இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறித்த விவரங்கள் இம்மாத இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என மெட்ரோ ரயில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ரூ.10 முதல் ரூ.40 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்ச ரயில் டிக்கெட் ரு.10 இருக்கும் என்றும் கிலோ மீட்டருக்கு ஏற்ப ரூ.15, ரூ.20, ரூ.30, ரூ.35, ரூ.40 என்ற அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் மெட்ரொ ரயில் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய சீசன் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் ஆனால் டோக்கன் கார்டு, ஸ்மார்ட் கார்டு என இரு வகையான டிக்கெட்டுகள் வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் இரு வழித்தடங்களில் உருவாக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில், முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான ரயிலை வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
English Summary : Metro train ticket rate has been announced since the project has entered the final stage of completion. ticket starts from Rs. 10 to Rs. 40 depending kilometer.