12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அடுத்து பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், கலை அறிவியல் ஆகிய படிப்புகள் படிப்பதற்கு விண்ணப்பங்களை வாங்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 15ஆம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களும் வரும் மே 9முதல் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில் கால்நடை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் தேதி எப்போது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் மே 8 அல்லது 10ஆம் தேதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் இன்று தனியார் தொலைக்கட்சி ஒன்றிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறினார். மேலும் புதுக்கோட்டை ஆய்வு மைய மருத்துவ அறிவியல் துறையில் நடப்பாண்டு முதல் தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படும் என்றும் திலகர் தெரிவித்துள்ளார்.
English Summary : Information about application for veterinary studies