என்னை அறிந்தால் வெற்றி படத்திற்கு அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டன. முதல்கட்ட படப்பிடிப்பில் அஜீத், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட அண்ணன் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வில்லன் கபீர்சிங்குடன் ஆன ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் கொல்கத்தா மற்றும் வெளிநாடுகளில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் அஜீத், அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் ஒரு குறும்படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த குறும்படத்தில் நடிகர் அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் செட் அமைக்கபப்ட்டுள்ளதாகவும், நவீன கேமராவின் உதவியால் இரண்டு அல்லது மூன்றே நாட்களில் இந்த குறும்படத்தின் படப்பிடிப்பை முடிக்க அஜீத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஜீத்துடன் ஏற்கனவே அப்புக்குட்ட்டி வீரம் படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் படப்பிடிப்பின்போது அப்புக்குட்டியின் நடிப்புத்திறமையை பார்த்து அவரை அஜீத் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த குறும்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அஜீத் வெள்ளித்திரையிலும் படம் இயக்குவார் என கூறப்படுகிறது.
English Summary : Ajith plans to take a short film within three days with Appukutty playing a important role in it.