திருக்கார்த்திகை தீப திருவிழா – 2023

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று (17.11.2023) தொடங்கியது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் பத்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (26.11.2023) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *