சிறப்பு அம்சங்கள் :

  • நடப்பு நிதியாண்டில், நாட்டின் பாதுகாப்புக்காக  இராணுவர்திற்காக ரூ 2,46,727 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது
  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிறுவனங்கள் வழங்கும் நிதிக்கு முழுமையான வரிவிலக்கு
  • புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விலை உயர்கிறது
  • மத்திய பட்ஜெட்டில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு புதிய வரி விதிக்கப்பட்டு உள்ளது
  • யோகா பயிற்சி வகுப்புகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு சேவை வரி கிடையாது
  • மூத்த குடிமக்களுக்கு தீவிர நோய்களுக்கான சிகிச்சைக்கு வரிவிலக்கு ரூ.80 ஆயிரமாக உயர்வு
  • போக்குவரத்துக்கான வரி விலக்கு ரூ.800-ல் இருந்து ரூ.1600 ஆக உயர்வு
  • புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை வரிவிலக்கு
  • மருத்துவ காப்பீடு ரூ.25 ஆயிரமாக அதிகரிப்பு
  • ஆன் லைன் சேவை வரி 12.36 % இருந்து 14 %மாக உயர்வு
  • ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 சதவீதம் வரி விதிப்பு
  • தொழில்நுட்ப சேவைகள் மீதான வரி 25% இருந்து 10 % குறைக்கப்படும்
  • 1 லட்சத்துக்கு மேல் உள்ள சொத்துகளை விற்பனை செய்யும் போது பான் நம்பர் அவசியம்
  • கறுப்பு பணம் பதுக்குவதை தடுக்க வரி அமைப்புகளில் சீர்திருத்தம்
  • உள்நாட்டில் கருப்பு பண புழக்கத்தை தடுக்க புதிய சட்டம்
  • வெளிநாட்டில் உள்ள சொத்து விவரத்தை மறைத்தால் 7 ஆண்டு சிறை
  • வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவது உறுதி
  • கருப்பு பணத்தை பதுக்கினால் 10 ஆண்டுகள் சிறை
  • டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்
  • கார்பரேட் வரி குறைப்பு 4 ஆண்டுகள் அமலில் இருக்கும்
  • தனி நபர்களுக்கான வரிச்சலுகைகள் நீடிக்கும்
  • நாட்டின் மொத்த வருவாய் 14 லட்சத்து 40 ஆயிரத்து 490 கோடி
  • நமது வளர்ச்சி என்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யப்படும்
  • பாதுகாப்புதுறைக்கு ரூ. 2 லட்சத்து 46,747 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
  • மத்திய அரசின் வருவாயில் 62% மாநிலங்களுக்கு வழங்கப்படும்
  • 150 நாடுகளில் இருந்து வருவோருக்கு உடனடி விசா
  • கிராமப்புறங்களில் தபால்கள் சென்றடைய விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்
  • 18-50 வயத்துக்குள் உள்ளவர்களுக்கு ரூ.350 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு
  • அடிப்படை கட்டமைப்பு வசதிக்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்
  • ஆதிதிராவிட மக்களுக்கான திட்டங்களுக்கு ரூ.35,851 கோடி
  • பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் நிதி ரயில், சாலை வசதிக்கு பயன்படுத்தப்படும்
  • வேலைவாய்ப்பு வழங்குதல், வறுமை ஒழிப்பு, பொருளாதாக வளர்ச்சி ஆகியவை உருவாக்குதல் முக்கிய நோக்கம்
  • நிதி பற்றாக்குறை 4.36 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைந்துள்ளது
  • வேலைவாய்ப்பு வழங்குதல், வறுமை ஒழிப்பு, பொருளாதாக வளர்ச்சி ஆகியவை உருவாக்குதல் முக்கிய நோக்கம்
  • பணவீக்கத்தை கட்டுபடுத்துவதில் அரசு சாதனை படைத்துள்ளது.
  • ருபாயின் மதிப்பு 6.4 % அதிகரித்துள்ளது.
  • உலகின் மிக முக்கியமான பங்குச் சந்தைகளில் 2வது சிறந்த சந்தை இந்தியா
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மகளிர் கல்வி, வேளாண் வருவாய் அதிகரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படும்
  • சரக்கு மற்றும் சேவை வரியை முறைபடுத்த அரசு உறுதி
  • அரசின் மூன்று முக்கிய சாதனைகள்
      * பிரதமரின் வங்கி கணக்கு திட்டம்
      * வெளிப்படையான அரசு நடைமுறை
      * தூய்மை இந்தியா திட்டம்
  • ஒவ்வொரு கிராம மற்றும் நகரத்துக்கு மருத்துவ வசதிகளை செய்து தருவது அவசியம்
  • விவசாயத்தை மேம்படுத்துவது அவசியம்.. கிராமப்புற மக்களின் நலனே முக்கியம்.
  • பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு சிறப்பான திட்டங்கள்.
  • இந்தியா 2022-ல் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது அனைவருக்கும் வீடு வழகப்படும்
  • வீட்டில் ஒருவருக்கு வேலை என்பது உறுதி செய்யப்படும்
  • ராமப்புற வளர்ச்சிக்காக ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும்
  • வேளாண் விளை நிலத்துக்கு நியாயமான விலை கிடைப்பது உறுதி செய்யப்படும்
  • 100 நாள் வேலை திட்டம் தொடரும்
  • நாடு முழுவதும் 80,000 உயர் நிலை பள்ளிகள் மேம்படுத்தப்படும்
  • வேலை தேடும் இளைஞர்கள் வேலையை உருவாக்கும் இளைஞர்களாக மாற்றப்படுவர்
  • 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழகப்படும்
  • மாதத்திற்கு ஒரு ரூபாய் பிரிமியத்தில் ஏழை மக்களுக்கு 2லட்சம் விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்
  • அனைத்து இந்தியர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்
  • அனைத்து கிராமங்களிலும் மருத்துவ வசதி செய்து தரப்படும்
  • கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் நகர்ப்புறங்களில் 5 கோடி வீடுகளும் கட்டப்படும்
  • விவசாயத்திற்கு 8.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
  • பழங்குடி மக்களுக்கான திட்டத்துக்கு ரூ.19,900 கோடி
  • இளைஞர்களுக்கு ‘நயி மன்ஜில்’ திட்டம் செயபடுத்தப்படும்
  • பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த நிர்பயா நிதிக்கு 1000 கோடி வழங்க முடிவு
  • ஏழை, நடுத்தர மாணவர்கள் ஐ.டி துறையில் மேல்படிப்பு படிக்க உதவி செய்யப்படும்
  • எய்ம்ஸ் தரத்தில் தமிழ்நாட்டில் மருத்துவமனை
  • இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு புதிய திட்டம்