செல்போன் மூலமாக மின்சார ரெயிலுக்கான டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் வசதியை சென்னை கடற்கரை, எழும்பூர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 5 ரெயில் நிலையங்களில் தெற்கு ரெயில்வே கடந்த மாதம் 15-ந்தேதி அறிமுகப்படுத்தியது. இந்த வசதி கோட்டை, பார்க், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், வேளச்சேரி, திருவான்மியூர், திருமயிலை, சென்னை சென்டிரல், பெரம்பூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய 13 ரெயில் நிலையங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் இந்த 13 ரெயில் நிலையங்களிலும் செல்போனில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் திட்டம் அமலுக்கு வருகிறது.

பதிவு செய்யும் முறை :

இதன்படி ‘ஆன்டிராய்டு’ ரக செல்போன்களில் www.utsonmobile.indianrail.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் செல்போன் எண்ணை அடையாளமாக காட்டி டிக்கெட் பதிவு செய்யவேண்டும்.

பதிவு செய்த உடன் RWallet என்ற கணக்கு உருவாக்கப்படும். டிக்கெட் கட்டணத்தை ஐ.ஆர்.டி.சி. இணையதளம் மூலமாகவும், ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டர்களின் மூலமாகவும் செலுத்தலாம். பயண டிக்கெட் பதிவு செய்த உடன் புறப்படவேண்டிய ரெயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.வி.எம். (தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரம்) எந்திரத்தில் டிக்கெட் நகல் எடுத்து பயணத்தை தொடங்கலாம்.

English Summary : Now electric train tickets can be bought through android phone. this facility is now available at 13 railway stations in Chennai.