baahubali
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படம் வெளியான ஐந்தே நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து தொடர்ந்து நல்ல வசூலை கொடுத்து கொண்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வசூலை குவித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஆங்கிலத்திலும் டப் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

‘பாகுபலி’ திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பெரும்பாலான விமர்சனங்கள் வந்துள்ளதால், இந்த படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து உலகம் முழுவதும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் ஆங்கிலத்தில் டப் செய்யும்போது பாடல்களை கட் செய்ய முடிவு செய்த தயாரிப்பாளர், ஆங்கில பதிப்பை எடிட்டிங் செய்ய பிரபல ஹாலிவுட் எடிட்டர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன “The Incredible Hulk”, “Clash of the Titans”, “Taken 2”, “Now You See Me” மற்றும் “The Legend of Hercules” போன்ற படங்களை எடிட்டிங் செய்த வின்செண்ட் தபைய்லான் (Vincent Tabaillon) என்பவரிடம் இந்த படத்தின் ஆங்கில பதிப்பை எடிட்டிங் செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பணி முடிவடைந்து உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பாகுபலி திரைப்படம் சீன மற்றும் ஜப்பான் மொழிகளில் டப்பிங் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Baahubali went to the hollywood editors table