flooddamage6116கடந்த மாதம் சென்னையில் ஏற்பட்ட கனமழை அதனை அடுத்து ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகியவை காரணமாக ஏற்பட்ட சேதங்களை ஏற்கனவே மத்திய குழு பார்வையிட்ட நிலையில் தற்போது நேற்று மீண்டும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது.

மத்திய உள்துறை இணைச்செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் அவர்கள் தலைமையேற்றுள்ள இந்த குழுவில் த்திய வேளாண்மைத்துறை கூடுதல் ஆணையர் மீனா, மத்திய குடிநீர் துறை முதுநிலை ஆலோசகர் ஜார்கர், மத்திய சுகாதாரத்துறை முதுநிலை மண்டல இயக்குநர் டாக்டர் ரோஷினி, மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் சுமித் கோயல், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பெஹரா, மத்திய நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணன்உன்னி, மத்திய சாலை போக்குவரத்துத் துறை மண்டல இயக்குநர் அரவிந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு நேற்று ஒரே நாளில் சென்னையின் 6 இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. சென்னை மயிலாப்பூர் சிவசாமி சாலை, கோட்டூர்புரம் குடிசைப் பகுதிகள், சைதாப்பேட்டை, ஜாஃபர்கான்பேட்டை, விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்வது இது இரண்டாவது முறையாகும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நவம்பர், டிசம்பரில் பெய்த வரலாறு காணாத மழையை அடுத்து வெள்ளம் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை இணைச்செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஏற்கெனவே தமிழகத்தில் ஆய்வு நடத்தி உள்ளது. இந்தக் குழு இன்று தூத்துக்குடியில் தனது ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.

English Summary: Central Committee Visited the Flood Damage 6 places in Chennai.