trains-171115சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ரயில் பாதைகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் மழை காரணமாக ஒருசில இடங்களில் ரயில் பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் ஆந்திர கடலோரப் மாவட்டங்களில் கனமழை பெய்வதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் சில ரயில்களின் மார்க்கம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயில்கள் மாற்றம் குறித்த முழுவிபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரக்கோணம், ரேணிகுண்டா, குடூர் மார்க்கமாக மாற்றப்பட்ட ரயில்கள் விவரம் வருமாறு:

வண்டி எண் 12269 சென்னை-நிஜமுதீன் விரைவு ரயில்

வண்டி எண் 12842 சென்னை-ஹவுரா கொரமாண்டல் விரைவு ரயில்

வண்டி எண் 12656 சென்னை-நவஜீவன் விரைவு ரயில்

வண்டி எண் 12687 மதுரை-டெஹ்ராடூன் விரைவு ரயில்

வண்டி எண் 06336 கொச்சுவெலி-குவஹாத்தி விரைவு ரயில்

வண்டி எண் 22352 எஸ்வந்த்பூர்-பாடலிபுத்திரா வாராந்திர விரைவு ரயில்

வண்டி எண் 22860 சென்னை – பூரி வாராந்திர விரைவு ரயில்

வண்டி எண் 17643 சென்னை எழும்பூர்-காகிநாடா போர்ட் சர்கார் விரைவு ரயில்

வண்டி எண் 12669 சென்னை-சப்ரா கங்கா காவேறி விரைவு ரயில். இது இன்று மாலை 17.40 மணிக்குப் புறப்படுகிறது.

வண்டி எண் 12759 சென்னை செண்ட்ரல்-ஐதராபாத் சார்மினார் விரைவு ரயில் இன்று 18.10 மணியளவில் புறப்படும். இது ரேணிகுண்டா குடூர் வழியாகச் செல்லும்.

வண்டி எண். 12655 அகமதாபாத்-சென்னை நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் குடூர் ரேணி குண்டா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது

வண்டி எண் 12603 சென்னை-ஐதராபாத் விரைவு ரயில் ரேணிகுண்டா, குடூர் வழியாக வந்து சேரும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கண்ட ரயில்களின் பாதைகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூர் இருந்து புறப்பட்டுச் செல்லும் மூன்று எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து நேற்று மாலை 5.20 மணிக்கு காக்கிநாடா செல்லும் காக்கிநாடா சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில், 5.40க்கு புறப்பட வேண்டிய சென்ட்ரல்-சாப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், 4.25க்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்-பூரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
English summary-Changes in train services due to heavy rain