திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழா நேற்று முன் தினம் தொடங்கியுள்ளதை அடுத்து தென்னக ரெயில்வே திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முதல் வரும் 24ஆம் தேதி வரை பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயில்கள் அனைத்தும் ரேணிகுண்டா வரை இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் இந்த சிறப்பு ரெயில்களை பயன்படுத்தி, நெரிசல் இன்றி திருப்பதிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செப்டம்பர் 17 முதல் 24 வரை தினமும் சென்னை சென்ட்ரலில் இருந்து எண்.56001 பாசஞ்சர் ரெயில் பகல் 1.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் நின்று அரக்கோணத்திற்கு பகல் 2.55 மணிக்கு சென்றடைகிறது. அதன்பின்னர் அரக்கோணத்தில் பகல் 3 மணிக்கு புறப்பட்டு திருத்தணி, ஏகாம்பர குப்பம், புத்தூர் ஆகிய இடங்களில் ஒருசில நிமிடங்களில் நின்று பின்னர் ரேணிகுண்டாவிற்கு மாலை 5 மணிக்கு சென்றடையும்.
அதேபோல் மறுமார்க்கமாக ரேணிகுண்டாவில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் சென்னை கடற்கரைக்கு இரவு 9.25 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரெயில் புத்தூர், ஏகாம்பர குப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர், பெரம்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது
English Summary:Chennai Central to Tirupathi Special train for Bramachavam Festival.