BSNLவிநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு ‘புது வசந்தம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின்படி, பி.எஸ்.என்.எல், ப்ரீ-பெய்டு லைஃப் டைம் சிம் கார்டினை ரூ.15 க்கு தகுந்த ஆதாரங்களை கொடுத்து பி.எஸ்.என்.எல் அலுவலகங்களில் பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த சிம் கார்டின் மூலம் 1000 நிமிடங்களுக்கு அழைப்புகளை இலவசமாக பேசிக் கொள்ளலாம். அதற்கான காலக்கெடு 3 மாதங்கள் ஆகும். மேலும், சிம் வாங்கிய முதல் 3 மாதத்துக்கு 0.80 பைசா மட்டுமே அழைப்புக்கான கட்டணமாக வசூலிக்கப்படும்.

சிம் வாங்கியதும், மாதம் ஒன்றுக்கு 25 இலவச எஸ்எம்எஸ் என முதல் 3 மாதங்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி, 50 எம்பி இணையச் சேவையும் முதல் மாதம் மட்டும் இலவசமாக வழங்கப்படும். மேலும் பி.எஸ்.என்.எல், நிறுவனம் நேற்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் கூறியதாவது, “பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நொடிக்கு 512kpbs வேகத்தில் இணையச் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், பாரத பிரதமரின் டிஜிட்டல் இந்தியா சேவையின் அடிப்படையில் தற்போதைய இணையச் சேவையின் வேகத்தை 4 மடங்கு அதிகமாக்கப்படவுள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் இணையச் சேவை இனிமேல் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சேவை வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பி.எஸ்.என்.எல், நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary:BSNL to Launch a New Service in honor of Ganesh Chathurthi.