metro_start
சென்னையில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை அனைத்து பணிகளும் முடிவடைந்து இயங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக தொடக்க விழா ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எனவே சென்னை மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா வரும் 29ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக சென்னை, கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையான மெட்ரோ ரயிலுக்கான பாதைகளின் பணி முற்றிலும் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழித்தடங்களில் 7 ரயில் நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வழித்தடங்களை ரயில்வேத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, போக்குவரத்து தொடங்க சான்றிதழ் ஏற்கனவே அளித்துள்ளனர். இதையடுத்து, இந்த பாதையில் ரயில் போக்குவரத்து ஒத்திகையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து வரும்29ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 

English Summary : Chennai Metro Rail service from June 29 onward.