madical
2015-16 ஆண்டிற்கான மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 19.06.2015 முதல் 25.06.2015 வரை நடைபெற்றது.  இந்த கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2257 மாணவர்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 597 மாணவர்களும், பல் மருத்துவக்கல்லூரியில் 85 மாணவர்களும், ஆகமொத்த 2939 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்களின் சேர்க்கைக்கான அனுமதி ஆணை வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் தேர்வான மாணவர்களுக்கு நேற்று முதல் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் எஸ்.எம்.எஸ். மூலமாகவும்,www.tnhealth.org என்ற இணையதளம் வாயிலாகவும் மற்றும் செல்போன் அழைப்பு வாயிலாகவும் மாணவர்களை தொடர்பு கொண்டு மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான அனுமதி ஆணையை உடனடியாக பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இரவில் அனுமதி ஆணை வாங்க வரும் மாணவர்களுக்கு தங்கிசெல்ல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் உடனுக்குடன் தகவல் பெற வசதியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிறப்பு கவுண்டர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அனுமதி ஆணை பெற்ற மாணவர்கள் அனைவரும் ஜூலை 3ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கூட்ட அரங்கில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அங்கு வந்திருந்த மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதி ஆணைகள் வழங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநர் கீதாலட்சுமி மற்றும் தேர்வுக்குழு செயலாளர் உஷா சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

English Summary : Clinical Studies warrant : Minister presented vijayapaskar.