சென்னை சென்டரல் – அரக்கோணம் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங்கில் இருந்து இரவு 21.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43130) செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூன் 6, 8) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி – சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43932) புதன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 7,9) அரக்கோணத்துடன் நிறுத்தப்படும். அரக்கோணம் – சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேளச்சேரியிலிருந்து இரவு 10.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43799) வியாழக்கிழமை (ஜூன் 8) சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும். சென்னை கடற்கரை – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இரவு 8:25 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43794) வெள்ளிக்கிழமை (ஜூன் 9) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி – சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இரவு 10:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43132) வியாழக்கிழமை (ஜூன் 8) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி – சென்னை சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு 12:15 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43001) புதன்கிழமை (ஜூன் 7) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையிலிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43801) புதன்கிழமை (ஜூன் 7) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இரவு 11:55 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) வியாழக்கிழமை (ஜூன் 8) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு 11.30 மணி மற்றும் 11.45 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் (வண்டி எண்கள்: 66007, 43025) வியாழக்கிழமை (ஜூன் 8) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *