10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2023-ம்ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இந்த அட்டவணையின்படி,

  • 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதிவரை பொதுத்தேர்வு நடைபெறும் எனவும்,
  • பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் எனவும்,
  • பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,

  • 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும்,
  • 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும்,
  • 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *