உயர் நீதிமன்ற கிளை உத்தரவால் அரசு, தனியார் பேருந்துகளில் கட்டண பட்டியலை உடனடியாக வைக்க வேண்டும் எனப் போக்குவரத்து துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளிலும் ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த நல்லையம் பெருமாள் உயர் நீதிமன்ற கிளையில் கடந்த ஆண்டு பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழகத்தில் பேருந்து கட்டணம் 2011-ல் மாற்றியமைக் கப்பட்டது. கட்டண உயர்வு தொடர் பான அரசாணையில் குறிப்பிட் டிருக்கும் கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே இடத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளில் வெவ்வேறு கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்தும், அரசாணை அடிப்படையில் பேருந்து கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிட வேண் டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது 2018 ஜனவரியில் மீண்டும் பேருந்து கட்டணம் உயர்த் தப்பட்டது. இந்த வழக்கு மீண் டும் விசாரணைக்கு வந்தபோது, இப்போதும் புதிய அரசாணையில் குறிப்பிட்டதற்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசாணையில் குறிப்பிட்டுள்ள பேருந்து கட்டணம் தான் வசூலிக்க வேண்டும். அனைத்து அரசு, தனியார் பேருந்துகளில் அந்த பேருந்து செல்லும் ஊர்களுக்கான கட்டணம் தொடர்பாக பயணிகளுக்குத் தெரியும் வகையில் பட்டியல் வைக்க வேண்டும் என பிப்ரவரி மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட பேருந்து கட்டணம் தொடர்பாக உடனே பட்டியல் வைக்க நட வடிக்கை எடுக்கவும், இது தொடர் பாக அரசு, தனியார் பேருந்து களில் சோதனை நடத்துமாறும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை இணை ஆணையர் வி.பாலன் உத்தரவிட்டுள்ளார்.