சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கால அட்டவணையை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்க முடிவு செய்துள்ளதால், கூடுதலாக 100-க்கும் மேற்பட்ட சர்வீஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 வழித்தடங் களில் தற்போது 35 கிமீ தூரத் துக்கு மெட்ரோ ரயில்கள் இயக் கப்படுகின்றன. சென்ட்ரலில் இருந்து எழும்பூர், கோயம்பேடு பேருந்து நிலையம் வழியாக விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் சேவை இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணாசாலையில் டிஎம்எஸ்-ல் இருந்து விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

7 நிமிடத்துக்கு ஒரு சேவை: இதனால், மெட்ரோ ரயில் களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தற்போது கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்து நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. அதன் படி, டிஎம்எஸ் – விமான நிலையத் துக்கு அலுவலக நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு சேவையும், மற்ற நேரங்களில் 14 நிமிடங்களுக்கு ஒரு சேவையும் இயக்கப்படும்.

மேலும், சென்ட்ரல் இருந்து விமான நிலையத்துக்கு 14 நிமிடங் களுக்கு ஒரு மெட்ரோ சேவை அனைத்து நேரங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல், சென்ட்ரலில் இருந்து ஆலந்தூருக்கு 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ சேவை கிடைக்கும். ஏற்கெனவே அலுவலக நேரங் களில் 10 நிமிடங்களுக்கு ஒரு சேவையும், மற்ற நேரங்களில் 20 நிமிடங்களுக்கு ஒரு சேவையும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் எண்ணிக்கை: இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் தற்போது 35 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முக்கிய மின்சார ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவை இணைக் கப்படுவதால், பயணிகளின் எண் ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் காத்திருக்காமல் உடனுக்குடன் பயணம் செய்யும் வகையில் தற்போது மெட்ரோ ரயில் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, அலுவலக நேரங் களில் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே 10 நிமிடங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய கால அட்டவணைபடி நேற்று முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப் படுகின்றன. இதனால், கூடுதலாக 100-க்கும் மேற்பட்ட சர்வீஸ்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.அலுவலக நேரங் களில் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே 10 நிமிடங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *