தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு அமலாகி உள்ளதால் நேற்று முன் தினம் முதல் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிய தொடங்கிவிட்டனர். இருப்பினும் ஹெல்மெட் பற்றாக்குறை காரணமாக ஒருசிலர் ஹெல்மெட் கிடைக்கவில்லை என்றும், ஹெல்மெட் வியாபாரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருமடங்கு விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார் வந்தது

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுரைக்கு ஏற்ப மாநில தொழிலாளர் ஆணையம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யும் செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தொழிலாளர் துறை ஆணையர் எச்சரித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள 30 ஊர்களில் உள்ள மாவட்ட தொழிலாளர் ஆய்வர்களிடம் இதுகுறித்து புகார் அளிக்கலாம் என கூறியுள்ள ஆணையர், அந்தந்த ஊர் ஆய்வர்களின் செல்போன் எண்களையும் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

1. சென்னை 1வது வட்டம் 94453 98738

2. சென்னை 2வது வட்டம் 94453 98739

3. சென்னை 3வது வட்டம் 94453 98740

4. காஞ்சிபுரம் 94453 98743

5. திருவள்ளூர் 94453 98745

6. கடலூர் 94453 98746

7. வேலூர் 94453 98741

8. விழுப்புரம் 94453 98747

9. திருவண்ணாமலை 94453 98742

10. திருச்சி 94453 98756

11. தஞ்சை 94453 98757

12. திருவாரூர் 94453 98758

13. பெரம்பலூர் 94453 98759

14. திண்டுக்கல் 94453 98760

15. கரூர் 94453 98754

16. தேனி 94453 98762

17. மதுரை 94453 98761

18. விருதுநகர் 94453 98763

19. சிவகங்கை 94453 98767

20. ராமநாதபுரம் 94453 98764

21. திருநெல்வேலி 94453 98768

22. தூத்துக்குடி 94453 98769

23. நாகர்கோவில் 94453 98771

24. கோவை 94453 98752

25. திருப்பூர் 94453 98772

26. கிருஷ்ணகிரி 94453 98748

27. குன்னூர் 94453 98753

28. சேலம் 94453 98749

29. ஈரோடு 94453 98751

30. நாமக்கல் 94453 98750

English Summary : List of phone numbers to make complaint if helmet dealer hike the rate of helmet.