சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிசம்பர் 22ம் தேதி எழுத்து/ கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 26ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக (CBT Method) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *