சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் கடந்த மாதம் ரூ.2009ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.1,893 ஆகக் குறைந்துள்ளது. இதனால் வர்த்தகரீதியான சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தும் சிறிய ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள் நடத்துவோர் உள்ளிட்ட வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதைபோல, வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,068-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *