திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு டிசம்பர் மாதத்துக்கான டிக்கெட் இன்று (25.09.2023) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ளது. இந்நிலையில், பக்தா்களின் வசதிக்காக, ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாத சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அதன்படி, டிசம்பர் 1 முதல் 22 வரையிலான ரூ.300 தரிசன டிக்கெட் காலை 10 மணி முதல் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *